கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை 9.30 மணிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன், ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினா்கள், மாகாண அமைச்சா்கள், மாகாண சபை உறுப்பினா்கள், மாவட்ட அரச அதிபா், திணைக்களங்களின் தலைவா்கள், மாவட்ட பொது அமைப்புகளின் தலைவா்கள் என பலா் கலந்துகொண்டுள்ளனர்.