வவுனியா நகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. 

குறிப்பாக இரவு நேரங்களில் வீதிகளில் நடுவே போக்குவரத்தை மேற்கொள்ளும் போது  நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 கடந்த காலங்களில் குறித்த விபத்துகள் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்தை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.