(எம்.மனோசித்ரா)

வறுமையை ஒழிப்பதற்கான கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் சப்ரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகளின் இக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். இதில் கிராமசக்தி மக்கள் இயக்கம் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.