சிலாபம், வென்னபுவ பிரதேசத்தில், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய,  புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்கு வளர்ந்த 5, 6 மாத குழந்தையே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்த குழந்தை, அந்த பெண்ணின் வீட்டிற்கு பின்னால் உள்ள கழிப்பறைக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது.

இது இயற்கை மரணமாக அல்லது கொலையா என்பது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.