யாழ் மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்யைதினம்  இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே மேற்கண்ட கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை தொடர்பில் அங்கு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகள் 2255 பேருக்கு மாத்திரமே தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் இன்னமும் 5200 பேருக்கு உதவித் தொகை வழங்க வேண்டியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே மாற்று திறனாளிகளாக இருக்கின்றவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற் கொண்டு அவர்கள் அனைவருக்குமான உதவித் தொகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டது. 

அந்த உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதன்போது யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும், முன்னெடுக்கப்பட வேண்டிய மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.