முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட மறு­சீ­ர­மைப்பை துரி­த­மாக சட்­ட­மாக்க நீதி அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இது­தொ­டர்­பாக தொடர்ந்து கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தா­னது முஸ்லிம் பெண்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் செய்யும் அநீ­தி­யாகும் என முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் கூட்­டாக தெரி­வித்­தன.

கொழும்பில் அமைந்­துள்ள முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­ன­ணியில் இது­தொ­டர்­பாக நேற்று நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்ள அமைக்­கப்­பட்ட குழுவின் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்ள 2009ஆம் ஆண்டு முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூக் தலை­மையில் அமைக்­கப்­பட்ட குழு தனது சிபா­ரிசு அறிக்­கையை கடந்த ஜன­வரி மாதம் நீதி அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தது. அந்த அறிக்­கையில் குறிப்­பிட்ட சில விட­யங்­களில் குழுவின் உறுப்­பி­னர்கள் மத்­தியில் பூரண இணக்­கப்­பாடு இருக்­க­வில்லை. குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் விவாகம் செய்­வ­தற்­காக இருக்­க­வேண்­டிய வய­தெல்லை, காதி நீதி­வான்­க­ளாக பெண்கள் நிய­மிக்­கப்­படல் மற்றும் விவா­கப்­ப­திவு கட்­டா­ய­மாக்­கப்­படல் போன்ற விட­யங்­க­ளிலே கருத்து வேறு­பாடு இருக்­கின்­றது.

அத்­துடன் குறிப்­பிட்ட அறிக்­கையை தயா­ரிக்க அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, இஸ்­லா­மிய சட்­ட­நி­பு­ணர்கள், வெளி­நாட்டு சட்ட அறி­ஞர்கள் என பல­ரது ஆலோ­ச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொண்டே இந்த அறிக்­கையை தயா­ரித்து நீதி அமைச்­ச­ரிடம் கைய­ளித் தோம். என்­றாலும்   அறிக்­கையில் இருக் கும் முரண்­பா­டான விட­யங்கள் தொடர்­பாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு குழுவின் தலை­வரால் கடந்த 19ஆம் திகதி விளக்கம் அளிக்­கப்­பட்­டது.

குறித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­படும் விட­யங்கள் தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே இது தொடர்­பாக தீர்­மா­னத்­துக்கு வரலாம் என தெரி­வித்து அவர்­க­ளுடன் 24 ஆம் திகதி (இன்­றைய தினம்) கலந்­து­ரை­யா­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்பட் ­டன. ஆனால் கடந்த 9 வரு­டங்­க­ளாக உலமா சபை­யுடன் கலந்­து­ரை­யா­டியே சிபா­ரிசு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் மீண்டும் அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாட நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தா­னது இந்த திருத்­தச் ­சட்­டத்தை மீண்டும் 9 வரு­டங்­க­ளுக்கு பின்­னுக்கு கொண்­டு­போகும் செய­லாகும். அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உலமா சபையும் கலந்­து­ரை­யா­டு­வ­தனால் பெண்கள் சார்­பாக எவ்­வ­கை­யான முடி­வுகள் எடுக்­கப்­படும் என்­பதில் எங்­க­ளுக்கு பாரிய சந்­தேகம் இருக்­கின்­றது.

அதனால் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யிலான குழு­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட சிபா­ரிசு அறிக்­கையை அங்­கீக­ரிப்­ப ­துடன் அவ்­வ­றிக்­கையை சட்டமாக்க பாரா ளுமன்றத்தின் அங்கீகாரத்தை மிக விரை வில் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சர் நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குறித்த அறிக்கை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி காலத்தை கடத்த இடமளிக்காமல் அதற்கான கால வரையறை ஒன்றை நீதி அமைச்சர் ஏற்ப டுத்த வேண்டும் என்றார்.