கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 22 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.