மத்­திய அர­சாங்­கத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற திட்­டங்­கள் மாகாண சபை ஊடாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் நேற்று மாவட்ட செய­ல­கத்தில் இணைத் தலை­வர்­க­ளான முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­கலா மகேஸ்­வரன், மாவை சேனா­தி­ராஜா ஆகியோர் தலை­மையில் நடை­பெற்­றது.  இதன்­போது மத்­திய அர­சாங்­கத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் விட­யங்­களை மாகாண சபைக்கு தெரி­யப்­ப­டுத்­தாது மேற்­கொள்­வதால் பல சிர­மங்­களை எதிர்­கொள்­வது குறித்து மாகாண எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராசா சில விட­யங்­களை முன்­வைத்தார். 

பிர­தமர் அலு­வ­ல­கத்தால் ஒவ்­வொரு பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளுக்கும் 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்­கு­ரிய வேலைத்­திட்­டங்கள் இங்கு வந்­துள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. இந்த வேலைத்­திட்­டங்­களை யார் செய்­வது? என்­பது தெளிவுபடுத்­தப்­ப­ட­வில்லை. இதேபோல் நிதி­ய­மைச்­சினால் கூட்­டு­றவு திணைக்­க­ளத்­திற்கு 2000 மில்­லியன் ரூபா கடன் அடிப்­ப­டையில் வழங்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது யார் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது தொடர்பில் தெளி­வுகள் இன்றிக் காணப்­ப­டு­கி­றது. ஆகவே திட்­டங்கள் வரலாம் எவ்­வாறு அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது தொடர்பில் ஒரு தெளிவு இல்லை. மத்­திய அரா­சங்­கத்தின் ஒதுக்­கீ­டாக இருந்­தாலும் அதனை யார் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பதை தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் எனத் தெரி­வித்தார்.

அரச அதிபர் தெளி­வு­ப­டுத்­து­கையில், 

கடந்த 13 ஆம் திகதி இவ்­வி­டயம் தொடர்­பான சுற்­று­நி­ருபம் கிடைக்­கப்­பெற்­றது. ஒவ்­வொரு பிர­தேச செய­ல­கத்­திற்கும் 200 மில்­லியன் ஒதுக்­கப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்­சினால் தெரி­விக்­கப்­பட்­டது. சுற்­று­நி­ரு­பத்தில் எந்­தெந்தத் துறை­களின் ஊடாக செய்­வது என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­ல­கங்கள் தயா­ரித்து அர­சியல் தலை­மைகள் ஊடாக கலந்­தா­லோ­சித்து நடை­மு­றைப்­ப­டுத்­துவது எனவும் கூறப்­பட்­டுள்­ளது. இதேபோல் கூட்­டு­றவுத் துறைக்கு கடந்த வரவு செல­வுத்­ திட்­டத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்­டுள்ள கூட்­டு­றவு சங்­கத்­திற்கு வழங்கி கூட்­டு­றவு ஆணை­யாளர் ஊடாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றார்.

அவைத் தலைவர் கருத்து

குறித்த விட­யத்தை ஏற்­றுக்­கொள்­ள மு­டி­யாது. மாகா­ணத்­திற்­கென இருக்­கின்ற கூட்­டு­றவு ஆணை­யாளர், மாகாண அமைச்­ச­ருக்கு தெரி­யாது சபைக்கு தெரி­யாது மத்­திய அர­சாங்­கத்தின் நேரடி கண்­கா­ணிப்பில் செயற்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. திட்­டங்­களை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஆனால் மாகாண சபை ஊடா­கவே இதனை செயற்­ப­டுத்த வேண்டும் என்றார். 

மாகாண அமைச்சர் அனந்தி சசி­தரன் 

மத்­திய அர­சாங்­கத்­தி­னது கலந்­து­ரை­யாடல் நடை­பெ­று­கின்­ற­போது எமது திணைக்­கள தலை­வர்கள் அதில் கலந்­து­கொள்­கி­றார்கள். ஆனால் நிதி ஒதுக்­கீ­டுகள் திட்­டங்கள் தொடர்­பாக மத்­திய அர­சாங்­கத்­தினால் தெளி­வு­ப­டுத்­திய பின்­னரே எமக்கு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்ட பின்னர் தான் எமக்கு தெரி­ய ­வ­ரு­கின்­றது. வடக்கு மாகாண சபையின் நேரடிக் கட்­டுப்­பாட்­டுக்­குள்ளே கூட்­டு­றவு துறை வரு­கின்­ற­போதும் மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு அமைச்­சினால் செய்­யப்­ப­டு­கின்ற திட்­டங்கள் கூட எங்­க­ளு­டைய அமைச்­சிற்கு வர­வில்லை. நாங்கள் அடிக்­கடி கூறு­வது கூட்­டு­றவுத் துறை தொடர்பில் வேலைத்­திட்­டங்கள் செய்­வ­தாயின் மாகாண திறை­சேரி ஊடாக செய்­யப்­பட வேண்டும். ஆனால் நிதி­ய­மைச்சு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நேர­டி­யா­கவே பங்­கு­கொள்­கி­றது. 

ஆனால் எமது அதி­கா­ரி­க­ளி­னாலே தான் இது செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு செய்­வ­தா­னது வடக்கு மாகா­ணத்தை புறந்­தள்ளி மத்­திய அர­சாங்கம் தன்­னு­டைய அர­சியல் சார்ந்த நன்­மை­களை செய்­வ­தற்­காக இதனை செய்து வரு­கின்­றது என்றார். 

முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்

குறித்த விடயம் பர­வ­லான பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தீர்­மா­னங்­களை எடுப்­பது மத்­திய அர­சாங்­க­மா­கவே உள்­ளது. ஆனால் மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் இது தொடர்பில் எத­னையும் அறிந்­து­ கொள்­வ­தில்லை. இது பெரும் பிரச்­சி­னை­யா­கவே தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றது. நான் பல தடவை இதனை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றேன். இதற்­கென ஒரு திட்­டத்தை வகுத்து இவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்படுவது என்பது தொடர்பில் மாகாண அமைச்சர்களுக்கோ, மாகாண சபைக்கோ தெரியப்படுத்தி அதை கண்காணிக்கின்றதாக இருத்தல் வேண்டும். இதேவேளை மாகாண பிரதம செயலாளர் இவ்வாறான கூட்டங்கள் நடைபெறுவது தொடர்பில் மாகாண அமைச்சருக்கோ மாகாண சபைக்கோ தெரியப்படுத்துவது சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். 

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட குறித்த விடயமானது  நிதியமைச்சு மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சுக்கு தீர்மானமாக அனுப்பிவைப் பதென முடிவெடுக்கப்பட்டது.