கிரீஸ் நாட்டின்  ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

குறித்த விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. 

வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். குறித்த விபத்தில் இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும், இதனால்  பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.