சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.