யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பவும் வறு­மையை போக்­கவும் மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கவும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டி­யுள்­ளன.

அவற்றில் முக்­கி­ய­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அதற்­காக அரச மற்றும் தனி­யார்­துறை முத­லீ­டுகள் அந்தப் பகு­தி­களில் அதி­க­மாக இடம்­பெ­ற­வேண்டும் என்­ப­துடன் அவற்றின் ஊடாக தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.

எனினும் யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இன்னும் வேலை­யின்மை வீதமும் வறுமை வீதமும் யுத்தம் நடை­பெற்ற வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் அதி­க­மாக இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த 2017ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீத­மா­னது  4.2 ஆக பதி­வா­கி­யி­ருந்­தது. அதா­வது 358507 பேர் வேலை­யில்­லாமல் இருப்­ப­தாக புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்­தது. 

அதில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் எந்­த­ளவு தூரம் வேலை­யின்மை வீதம் காணப்­ப­டு­கின்­றது என்­பதை  முக்­கி­ய­மாக  ஆரா­யப்­ப­ட­வேண்டும்.  நாடு­மு­ழு­வதும் 4.2 வீத­மாக காணப்­ப­டு­கின்ற வேலை­யின்மை வீதத்தில் வடக்கு மாகா­ணத்தில் அது 7.7 வீத­மாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­போன்று கிழக்கு மாகா­ணத்தில் 6 வீத­மாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த இரண்டு மாகா­ணங்­களில் தான் வேலை­யின்மை வீதம் அதி­க­மாக இருக்­கின்­றது.

அதா­வது வேலை­யின்மை வீதம் குறைந்த மாகா­ண­மாக மேல் ­மா­காணம் காணப்­ப­டு­கின்­றது. அங்கு 3.2வீதமே வேலை­யின்மை  வீதம் உள்­ளது.  இதே­வேளை வட,­கி­ழக்கு மாகா­ணங்­களில் மாவட்­டங்­களை எடுத்­துப்­பார்த்­தாலும் வேலை­யின்மை வீதம் மிக அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. யாழ்.மாவட்­டத்தில் 10.7 வீத­மாக  வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­யுள்­ளது. மன்னார் மாவட்­டத்தில் 3.8வீத­மா­கவும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 4.8 வீத­மா­கவும்  கிளி­நொச்சி மாவட்­டத்தில் 6.1 வீத­மா­கவும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 6.6 வீத­மா­கவும்  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 6.4 வீத­மா­கவும் அம்­பாறை மாவட்­டத்தில் 5.2 வீத­மா­கவும் வேலை­யின்மை வீதம் காணப்­ப­டு­கின்­றது.

நாட்டில் ஏனைய மாவட்­டங்­களில் ஒப்­பீட்­ட­ளவில் வேலை­யின்மை வீதம் குறை­வா­கவே  உள்­ளது. கண்டி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை போன்ற மாவட்­டங்­களில் 5 வீதத்தை தாண்டி வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள மாவட்­டங்­க­ளி­லேயே அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­ள்ள­மையை காண­மு­டி­கின்­றது.

அதே­போன்று  வறு­மையை எடுத்து நோக்­கி­னாலும் தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் வறுமை வீத­மானது 4.1 ஆக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.1995 ஆம் ஆண்டு 28.8 வீத­மாக இருந்த வறு­மை­யா­னது 2006 ஆம் ஆண்டில் 15.2 வீத­மாக குறை­வ­டைந்து 2016ஆம் ஆண்டில்  4.1 ஆக மேலும் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.  அந்­த­வ­கையில் தற்­போது வறுமை வீத­மா­னது 4.1 ஆக இருக்­கின்ற நிலையில் அது யுத்தம் நடை­பெற்ற வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை நாம் ஆரா­ய­வேண்டும்.

அதன்­படி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே வறுமை வீதம் அதி­க­ரித்து  காணப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகா­ணத்தில் 7.7 வீத­மா­கவும் கிழக்கு மாகா­ணத்தில் 7.3 வீத­மா­கவும்  வறுமை வீதம்  காணப்­ப­டு­கின்­றது.  அதிலும் வட­மா­கா­ணத்தில்  யாழ். மாவட்­டத்தில் 7.7 வீத­மா­கவும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 12.7 வீத­மா­கவும்  கிளி­நொச்சி மாவட்­டத்தில் 18.2 வீத­மா­கவும்  மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 11.3 வீத­மா­கவும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 10 வீத­மா­கவும் வறுமை பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

ஏனைய மாவட்­டங்­களைப் பார்க்கும் போது ஒப்­பீட்­ட­ளவில் குறை­வா­கவே வறுமை வீதம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. இந்த சூழலில் பார்க்­கும்­போது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் பாரி­ய­ளவு தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் உண­ரப்­ப­டு­கின்­றது.

வேலை­யின்மை வீதத்­திலும் வறுமை வீதத்­திலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உயர்ந்த நிலையில் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.எனவே இங்கு வறு­மையை போக்கி மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து பொரு­ளா­தார வளர்ச்­சியை மேற்­கொள்­ள­வேண்­டு­மாயின்  புதிய தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.  இதற்கு அங்கு புதிய தொழில்­மு­யற்­சி­களை உரு­வாக்­கு­கின்ற வகை­யி­லான முத­லீ­டுகள் செய்­யப்­ப­ட­வேண்டும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட இந்த பிர­தே­சங்­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பதன் மூலம்  தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்க முடியும். எனவே அர­சாங்கம் இப்­ப­கு­தி­களில் முக்­கி­யத்­துவம் செலுத்தி புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது அவ­சியம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை நாட்டில் உரு­வாக்­கு­வ­தாக தெரி­வித்­துள்­ள­துடன் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக கூறி­யி­ருக்­கின்றார்.

அதில் முக்­கி­ய­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் அவ­தா­னத்­துக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. பிர­தமர் இதில் கவனம் செலுத்­த­வேண்டும். அண்­மையில் இலங்­கையின் பொரு­ளா­தாரம் தொடர்­பாக  இடைக்­கால  மதிப்­பீட்டு அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்த  உலக வங்கி  வடக்கு, கிழக்கு பகு­தி­களில்   புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­வேண்­டி­யது அவ­சியம் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

அதா­வது நாட்டில் மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் காணப்­படும் வரு­மான இடை­வெ­ளிகள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் தொழி­ல் படையில் யுத்­தப் பாதிப்பின் தாக்கம்   இன்றும் தெரி­கி­றது. இந்த இரண்டு மாகா­ணங்­க­ளிலும் வேலை­யின்மை வீதம் அதி­க­மா­கவே காணப்படுகின்றது. எனவே மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவேண்டியது அவசியமாகும் என்று இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சியை    ஏற்படுத்தவும் அப்பிரதேசங்களை  பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பவும் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன்  வடக்கு, கிழக்கில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற வறுமையையும் வேலையின்மை வீதத்தினையும் குறைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. 

(ரொபர்ட் அன்டனி)