திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில்  லொக்கீல் சந்தியில் இன்று பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை பகுதியிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை லொக்கீல் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. முச்சக்கர வண்டிக்கு முன்னால் சென்ற வேன்  லொக்கீல் சந்தியில் பாதையை மாறும் சமயத்தில் பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேனின் மீது மோதியே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் முச்சக்கர வண்டி சாரதிக்கே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் முன்பகுதி பலத்த சேதமாகியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.