ஐஎஸ் உறுப்பினர்களிற்கு மரண தண்டனை – பிரிட்டன் எதிர்க்காது

Published By: Rajeeban

23 Jul, 2018 | 08:16 PM
image

பீட்டில்ஸ் என அழைக்கப்படும் பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களிற்கு அமெரிக்காவில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிடப்போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையணியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு ஐஎஸ் உறுப்பினர்கள் தொடர்பிலேயே பிரிட்டன் இவ்வாறுதெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரு உறுப்பினர்களும் ஐஎஸ் அமைப்பின் படுபயங்கரமான வீடியோக்களில் தோன்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மனிதாபிமான பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடிக்கும் இவர்கள் அவர்களை விடுவிப்பதற்காக கப்பம் கோரும் வீடியோக்களை வெளியிட்டதுடன் சிலரை கொலை செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறு இவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ்பொலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்ர்பு தெரிவிக்கப்போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இரு ஐஎஸ் உறுப்பினர்களிற்கும் மரணதண்டனையை வழங்கவேண்டாம் என பிரிட்டன் கோரப்போவதில்லை என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சஜித் டேவிட் அமெரிக்க சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை வழங்கவேண்டாம் என கோராமலிருப்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மரணதண்டனையை எதிர்க்கும் பிரிட்டனின் நீண்டகால கொள்கையில் இதன் காரணமாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜேம்ஸ்பொலியின் தாய் இவர்களிற்கு மரணதண்டனை வழங்கினால் அவர்களிற்கு தியாகிகள் அந்தஸ்த்து கிடைக்கும் என்பதால் அவர்களை சிறைக்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47