யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது; யாழ் ஒருங்கிணைப்புக்குழு 

Published By: Digital Desk 4

23 Jul, 2018 | 07:50 PM
image

(எம். நியூட்டன்)

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு திணைக்கப்பணிப்பாளருக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று  இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் திணைக்களம் தொடர்பான விடயத்திலேயே இவ் விடையம் எடுக்கப்பட்டள்ளது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம்  யாழ். துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைப்பு செய்யும்போது விளையாட்டரங்கின் ஒருபகுதி யாழ். கோட்டையின் ஒரு பகுதியாக உள்ளமையால் அதனை புனரமைப்பு செய்ய விடாது பல்வேறு தடைகளை தொல்லியல் திணைக்களம் விதித்தது. 

அவ்வாறான நிலையில் இராணுவத்தினர் எவ்வாறு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதி பெறப்பட்டதாகவும் தெரியவில்லை. எனவே இராணுவத்தினரை கோட்டைக்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.  

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி,

2010 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்.கோட்டையின்  ராணி மாளிகையின் ஒரு பகுதியில் சுமார் 20 ற்குட்பட்ட இராணுவத்தினர் தங்குவதற்கு ஏற்ற  சிறிய முகாம் காணப்பட்டது. தற்போது ராணி மாளிகை மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கையை விடுத்திருந்தோம். இதற்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு இராணுவத்தினர் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கமைவாக பணிப்பாளரினால் 40x 20 என்ற அளவில் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் இராணி மாளிகை புனரமைக்கப்பட்டு அதற்குள் நூதன சாலை அமைக்கப்படவுள்ளது. அதற்காகத் தான் அப்பகுதி புனரமைக்கப்படவுள்ளது.  புனரமைக்கப்பட்டதும் அங்கு ஒரு  நூதன சாலையும் அப்பகுதியலிருந்து ஆலயம் அமைக்கப்படவுள்ளது. அவ்வவாறு புனரமைக்ப்படும்போதும் மீண்டும் இராணுவத்தினருக்கு அது வழங்கப்படமாட்டாது.

இதேவேளை சிவாஜிலிங்கம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை ஏற்படின் தற்காலிக கொட்டகைக்குள்  அதற்கு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடட்டும். புனரமைப்பு முடிந்ததும் பொலிஸார் வெளியேறவேண்டும். இராணுவத்தை இருக்க விட்டால் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாக போய்விடும்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் திணைக்களப் பணிப்பாளருக்கு குறித்த விடயத்தை எழுதுவதாக தெரிவித்ததுடன் கோட்டைக்குள் ஒட்டகம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

குறித்தவிடயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக அனுப்பி வைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16