மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் இன்று 39 வது நாளாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணி நடைபெற்றது.

கடந்த இரு நாட்கள் விடுமுறையின் பின் இன்று நடைபெற்ற இவ் அகழ்வுப் பணியானது  ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நோக்குடன் இடம்பெற்ற செயல்பாடாகவே இருந்தது.

விஷேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் இவ் அகழ்வு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.