எமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Published By: Digital Desk 4

23 Jul, 2018 | 06:10 PM
image

எமது போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டுள்ளதே தவிர  எமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே எமது போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அதுவரை எமது போராட்டம் தொடருமென   முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிதரக் கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 18 ஆம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனால் அது எமது போராட்ட முடிவல்ல அந்த இடத்தில் எமக்கு பாரிய சிக்கல்கள் இருந்தது. எனவே அந்த இடத்தில் எமது போராட்டத்தை நிறுத்தி மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம் அதன்விளைவாக எமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம்.

எமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி நிறுத்தப்படாது. காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போம் என உறவுகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை பத்துமணியளவில் மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தமக்கான இணைப்பு  அலுவலகத்தை திறந்து போராட்டத்தை தொடரும் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 17:21:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01