(நா.தினுஷா) 

அரசாங்கத்துக்கு தோல்வி பயம் இருப்பதனால் மகாண சபை தேர்தலை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி மாகாணசபை தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாறான முரண்பாடுகள்  தொடர்ந்தும் நீடிக்குமாயின் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமற்றதாகவே இருக்கும். 

மேலும் தோல்வி பயம் காரணமாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் தாமதித்துக் கொண்டு வருகின்றது. அரசாங்கக் கட்சிகளுக்கு இன்னமும் தோல்வி பயம் இருப்பதால் இத் தேர்தல்களை 2020 வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது என்றார்.