(இரோஷா வேலு) 

போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸாரின் போக்குவரத்து விதி மீறல் அபராத புத்தகத்தை பறித்து கிழித்தெறிந்து விட்டு தப்பிச் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தனது குடும்பத்தாருடன் காரில் தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் வழியாக நுழைய முற்படுகையில் போக்குவரத்து பொலிஸார் குறித்த காரை நிறுத்தி பரிசோதனை மேற்கொண்டதுடன் சாரதியான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சாரதி அனுமதிப்பத்திரைத்தையும் பொலிஸார் கேட்டபோது, அவர் திடீரென கடமையிலிருந்த பொலிஸாரின் கையிலிருந்த அபராத விதிக்கும் புத்தகத்தை பறித்து கிழித்தெறிந்து விட்டு காரில் வேகமாக தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் வைத்து காரை மடக்கப் பிடித்த வெலிபன்ன பொலிஸார் குற்றத்துடன் தெடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்ததுடன் அவரை மதுகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொண்டனர்.