வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் இனந்தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று முன்தினம் இரவு பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பபூச்சினால் சில விசமிகளினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அவ்விடத்தை சுற்றிவளைத்த பொலிசார் பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தற்போது அப்பகுதியில் புலனாய்வுப்பிரிவினர் பூரண கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எவரால் எழுதப்பட்டடுள்ளன? எதற்காக எழுதினார்? போன்ற விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசாருடன் இணைந்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.