நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்தே எதிர்வரும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற உள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையில் செய்துகொள்ளப்படவுள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் 10 குறைகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.