இன்று(23-07-2018), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம்   இடம்பெறவுள்ளது. மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐபெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.

இலங்கையில் நீர்ப்பாசன துறையில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் களு கங்கை நீர்த்தேக்கமாகும்.

இதன்மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.