(ரொபட் அன்­டனி)

மாகா­ண­சபைத் தேர்­தலை பழை­ய­ மு­றை­மையில் நடத்­து­வ­தையே நாங்கள் விரும்­பு­கின்றோம்.  எந்த முறை­மையில்  தேர்தல் நடத்­தப்­பட்­டாலும் எமக்கு வெற்­றி ­நிச்­ச­ய­மாகும்.  ஆனால்  பழைய முறை­மையே   சிறந்­தது என்று   கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல்ல   குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

புதிய உள்­ளூ­ராட்­சி­ மன்றத் தேர்தல் முறை­மை­யா­னது பல்­வேறு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அந்­தக்­கு­ழப்­பங்கள்  மாகா­ண­சபைத் தேர்­த­லிலும் இடம்­பெ­றக்­கூ­டாது. 

தற்­போது சிறு­பான்மை கட்­சி­களும் புதிய முறை­மையை எதிர்த்­துள்­ள­மையை கவ­னத்தில்  கொள்­ள ­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

மாகா­ண­ சபைத் தேர்­தலை எதிர்­வரும்  டிசம் 23 அல்­லது ஜன­வரி 5ஆம் திகதி நடத்­து­ வ­தற்கு  கடந்த வெள்­ளிக்­கி­ழமை  பாரா­ளு ­மன்­றத்தில் கூடிய கட்சித் தலைவர் கூட்­டத் தில்  தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

 அந்த வகையில்   தேர்­தலை எந்­த­ மு­றை யில் நடத்­து­வது என்­பது குறித்து ஆராய  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  குழு­ நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த நிலை­யி­லேயே கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் இது தொடர் பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மாகா­ண ­சபைத் தேர்­தலை  எந்­த­ மு­றை­மை­யி­லா­வது  விரைவில் நடத்­த­வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்.  தேர்­தலை  விரைவில்  நடத்­துங்கள் என்றே  நாங்கள்  கோரி­ வ­ரு­கின்றோம். இந்­த­நி­லையில்  மாகா­ண­சபைத் தேர்­தலை  பழைய முறை­மையில் நடத்­து­வதே சிறந்­தது என்று நாங்கள் நம்­பு­கின்றோம். 

காரணம் புதிய முறை­மையில் நடத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் முடி­வுகள்  பல குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டன.   அந்­த ­கு­ழப்­பங்கள்  மாகா­ண­ சபைத் தேர்­த­லிலும் தொடர்­வ­தற்கு   இட­ம­ளிக்க முடி­யாது. அது­மட்­டு­மன்றி புதிய  முறை­மையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வ­ளித்த சிறு­பான்மை கட்­சிகள் இன்று   புதிய முறைமை வேண்டாம் என்றும் பழைய முறை­மையே சிறந்­தது என்றும் கூறி­வ­ரு­கின்­றன.     

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் புதிய  முறை­மையின்  பாத­க­நி­லைமை குறித்து விரி­வாக உரை­யாற்­றி­யி­ருந்தார். எனவே  பழைய முறை­மை­யி­லேயே  மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வதே  சரி­யா­ன­தாக இருக்கும் என்று  நாங்கள் நம்­பு­கின்றோம். 

எப்­ப­டி­யா­வது   மாகா­ண­சபைத் தேர்­தலை விரை­வாக நடத்­த­வேண்டும். ஏற்­க­னவே   சில மாகா­ண­ச­பைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளன.   அந்த நிலைமை நீடிக்கக்கூடாது. விரைவில்  பழையமுறைமையில் தேர்தலை நடத்து வதற்கான தீர்மானத்தை அரசாங்கம்  எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் முன்வைக்கின்ற கரிசனைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.