(ரொபட் அன்டனி)

சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு பெற்­றுக்­கொ­டுத்தால் அதனைப் பொறுப்­பேற்­ப­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன் என்று சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணியின் முக்­கி­யஸ்தர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

தற்­போ­தைய இக்­கட்­டான இந்த சூழலில் சுதந்­தி­ரக்­கட்­சியின்  செய­லாளர் பத­வியை பொறுப்­பேற்று கட்­சியை கட்­டி­யெ ழுப்பி மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு நான் என்னை அர்ப்­ப­ணிக்க  தயா­ராக இருக்­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீ­லங்கா சுதந்திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக   வெளி­வந்­து­கொண்­டி­ருக்கும்  தக­வல்கள் குறித்து  வின­வி­ய­போதே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

தயா­சிறி ஜய­சே­கர  இது­தொ­டர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பொறுப்­பேற்­கு­மாறு  எனக்கு இது­வரை யாரும் அறி­விக்­க­வில்லை.  அவ்­வாறு  எந்­த­வொரு கோரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வு­மில்லை.  ஆனால்  சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு வழங்­கு­வ­தற்கு  கட்­சியின் தலைமை தீர்­மா­னிக்­கு­மாயின் அந்தப் பத­வியை பொறுப்­பேற்று   கட்­சியை முன்­னேற்­று­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன். 

தற்­போ­தைய இந்த  இக்­கட்­டான சூழலில்  சுதந்­தி­ரக்­கட்­சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வந்து முன்­னேற்­றப்­பா­தையில் வழி­ந­டத்த செய­லாளர் பத­வியை பொறுப்­பேற்க நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். 

ஆனால் எனக்கு சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பெற்­றுத்­த­ர­வுள்­ள­தாக யாரும் இது­வரை அறி­விக்­க­வில்லை. எனினும் அவ்­வாறு ஒரு சந்­தர்ப்பம் கிடைத்தால்  அதனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு  நான் தயா­ராக இருக்­கின்றேன் என்றார். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­ட­போது  அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியின்  16 பேர்  அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி சுயா­தீன அணி­யாக செயற்­ப­டு­கின்­றனர். அந்த 16 பேரின் அணியில்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை தவிர ஏனையோர் மஹிந்த ராஜ­பக்ஷ  தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­செ­யற்­ப­டு­கின்­றனர். 

எனினும் கூட்டு எதி­ர­ணியில் அங்­கத்­துவம் வகிக்கத் தான் தயா­ரில்லை என தயா­சிறி ஜய­சே­கர கூறி­வ­ரு­கின்றார். இந்­நி­லை­யி­லேயே எதிர்­வரும் செப்­டெம்­பர்­மாதம் 2ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியின் மாநாட்டின் போது   தயாசிறி ஜயசேகர  கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.  இந்த சூழலிலேயே  தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டால் அதனை ஏற்று கட்சியை மீண்டும்  வெற்றிகரமான பாதைக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக  தயாசிறி ஜயசேகர அறிவித்திருக்கின்றார்.