கோத்தா­வுக்கோ சஜித்­திற்கோ ஆட்­சியை கொடுத்தால் போராட தயா­ரா­குங்கள் - அநுரகுமார

Published By: Vishnu

23 Jul, 2018 | 07:42 AM
image

(ஆர்.யசி)

மக்கள் ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என்ற மக்கள் போராட்­டத்­தையே நாமும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.  இப்­போது இடம்­பெறும் ஊழல் ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய பொறுப்பு மக்கள் அனை­வ­ருக்கும் உள்­ளது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். 

கோத்­த­பாய ராஜபக்ஷவுக்கோ சஜித் பிரே­ம­தாஸ­விற்கோ கொடுத்துவிட்டு மீண்டும் மக்கள் நெருக்­க­டியை சந்­திக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நேற்று முன்­தினம் அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்­றது. இதில்  கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார். 

 அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில், 

நாட்டு மக்கள் அனை­வ­ரதும் தேவைகள் சரி­யாக பூர்த்­தி­யா­கக்­ கூ­டிய வகை­யிலும், அனைத்து இன மக்­களின் உரி­மை­களும் பலப்­ப­டக்­ கூ­டிய வகை­யி லும் இந்த நாட்டின் ஆட்சி இடம்­பெற வேண்டும். மக்­களின் தேவையும் ஆட்­சி­யா­ளரின் நோக்­கமும் ஒன்­றாக இருக்­கக்­கூ­டிய மக்கள் ஆட்­சி­யாக அது அமைய வேண்டும். பெரும்­பா­லான மக்­களின் நோக்கம் என்­ன­வாக உள்­ளதோ  அதுவே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யாக எமது நோக்­க­மா­கவும் உள்­ளது. மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும், மக்கள் நலன் காக்­கப்­பட வேண்டும், உரி­மை­களும் சலு­கை­களும் சரி­யாக சென்­ற­டைய வேண்டும். 

இந்த நாட்டில் எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் அவர்­க­ளுக்­கான உரி­மைகள் கிடைக்க வேண்டும்.   நாட்டின் பொரு­ளா­தாரம் பல­ம­டைய வேண்டும், வேலை­யில்லா பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்ற மக்­களின் நோக்­கங்­களே எமக்கும் உள்­ளன. இது தான் மக்கள் ஆட்­சி­யா­கவும் அமைய முடியும். 

ஆனால் இன்று மக்கள் ஆட்சி இடம்­பெ­ற­வில்லை.   நாட்டில் இடம்­பெறும் பாரிய ஊழல், கள­வுகள், போதைப்­பொருள் கடத்­தல்கள் அனைத்­துமே அரச மாளி­கை­களில் இடம்­பெ­று­கின்­றன. சாதா­ரண கள­வுகள் குறித்து நாம் பேசு­கின்றோம். ஆனால் மிகப்­பெ­ரிய ஊழல் குற்­றங்கள் அனைத்­துமே அரச மாளி­கை­களில் தான் இடம்­பெ­று­கின்­றன. இதுவே நாட்டை  ஊழல்­வாத நாடாக மாற்­றி­யுள்­ளது. மக்கள் நெருக்­க­டி­களை சந்­திக்­கவும், பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்சி காணவும் இதுவே கார­ண­மாக  அமைந்­துள்­ளது. இந்த ஆட்சி மக்கள் ஆட்சி அல்ல. இது ஊழல் வாத ஆட்­சி­யாகும், மக்கள் மீது வரிச்சுமை­களை சுமத்தி அதன் மூல­மாக அர­சாங்கம் சுக­போக வாழ்க்­கையை வாழ்ந்து வரு­கின்­றது. அதற்­கா­கவே இவர்கள் ஆட்­சி­யிலும் உள்­ளனர்.  கடந்த 70 ஆண்­டு­க­ளாக இந்த ஊழல் ஆட்­சியே இடம்­பெற்று வரு­கின்­றது. ஆகவே இந்த ஆட்சி தன்­மையை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய கடமை எம் அனை­வ­ருக்கும் உள்­ளது. இந்த மக்கள் ஆட்­சியை மக்கள் விடு­தலை முன்­ன­ணியை சார்ந்த அணி­யினால் மட்­டுமே உரு­வாக்க முடியும். 

கோத்­த­பாய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால் நல்­லது  என சிலர் கூறு­கின்­றனர். சஜித் பிரே­ம­தாச வந்தால் நல்­லது என மேலும் சிலர் கூறு­கின்­றனர். இவர்­களை ஆட்­சிக்கு கொண்­டு­வந்து பார்த்தால் தெரியும். கடந்த 70 ஆண்­டு­க­ளாக இவர்­க­ளுக்கு ஆட்­சியை கொடுத்­ததன் விளை­வு­க­ளையே நாம் இன்று அனு­ப­வித்து வரு­கின்றோம். இப்­போதும் இவர்­க­ளுக்கு தான் ஆட்­சியை கொடுப்போம் என மக்கள் நினைத்தால் கோத்தபாய ராஜபக் ஷவுக்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ ஆட்சியை கொடுத்துப்பாருங்கள். ஆனால் ஆட் சியை கொடுத்துவிட்டு மீண்டும் போராட தயாராக வேண்டும் என்பதை யும் மக்களுக்கு இப்போதே தெரிவித்து கொள்கின்றோம் எனவும் அவர் குறிப் பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08