(எம்.எம்.மின்ஹாஜ்)

சிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குருநாகலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்ச்சி திட்டம் இன்று அநுராதபுத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, புத்தளம், கொழும்பு , மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதன்போது அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் சிறிகொத்தாவில் தயாரிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறித்த திட்டங்கள் கிராம மக்களிடம் செல்வது பெரும் குறைபாடாக இருந்து வந்ததுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் சிறிகொத்தாவில் வேலைத்திட்டம் கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.