இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசன் பற்றிய நிகழ்ச்சி தொகுப்பொன்று நெஷனல் ஜோக்கிரபி தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

தமிழ் திரைத்துறையில் ஒரு முன்னணி ஆளுமையாக இருப்பவர் கமல்ஹாசன். தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

மறுபுறம்  இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் அணித் தலைவராகவும்  உள்ளவர் விராட் கோலி. 

இப்படியான இரு வேறுபட்ட துறைகளில் முக்கிய ஆளுமையாக இருந்துவரும் இருவர் குறித்தும் நெஷனல் ஜோக்கிரபி தொலைக்கட்சியில் ஆரம்பிக்கப்பட உள்ள ‘மெகா ஐகான்ஸ்’ எனும் புதிய தொடரில் விவரிக்கப்பட உள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் வெறும் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல் பிரபலங்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.