இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 490 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி இன்று காலை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் மூன்றாம் நாள் அட்டத்தை 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுதிக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரத்ன 12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 85 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் ஏழு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 71 ஓட்டங்களையும் தனுஷ்க குணலதிக்க 2 ஆறு ஒட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 61 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்க‍ளையும் லுங்கி நிட்ஜி ஒன்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்  பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டினை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணி 23 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி 14 ஓட்டங்களை பெற்றிருந்த அடீன் மர்க்ரம் ரங்கன ஹேரத்தினுடைய பந்து வீச்சிழ் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது காரணம் அதிக படியாக ஆட்டமிழப்புக்கள் இலங்கைக்கு கைநழுவிப் போனது.

மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெனுஷ் டிபுரின் மற்றும் டெய்ன் எல்கர் ஜோடி 57 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. அதன் பின்னர் 80 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றிருந்த வேளை டெய்ன் எல்கர் தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமும்புகுந்த அஸீம் அம்லா அதிக நேரம் தாக்குப் படிக்காமல் 6 ஒட்டங்களுடன் ஹேரத்தினுடைய பந்தில் பொல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தென்னாபிரிக்க அணி வீரர்களின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிவை எதிர்கொண்டன.

அம்லாவுக்கு அடுத்தபடியாக களம்புகுந்த அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 7 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மெத்தியூஸிடம் பிடிகொடுத்து வெளியேற களம்புகுந்த கேஷவ் மஹாராஜ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டங்களையும் பெறாது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக அகில தனஞ்சயவுக்கு ஹெட்ரீக் வாய்ப்பொன்று காத்திருந்தது. இருப்பினும் அந்த வாய்ப்பினை தெம்ப பவுமா கலைத்தார். 

இறுதியாக தென்னாபிரிக்க அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தெனுஷ் டிபுரினும் 45 ஓட்டங்களுடனும் தெம்ப பவுமா 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் தில்றுவான் பெரேரா 38 ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு இன்னும் வெற்றி பெறுவதற்கு 351 ஓட்டங்கள் மாத்திரம் உள்ளது. நாளை போட்டியின் நான்காம் நாளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.