பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன்  யோசித்த  ராஜபக்ஷவின் பதவி மற்றும் தொழில் ஆகியன  பெப்ரவரி 28  ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யோஷித்தவின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் எல்லாம்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்.  அவர் கடற்படை தலைமையகம் அனுமதி இல்லாமல் எந்த கடற்படை வளாகத்திற்குள்  நுழைய அனுமதி கிடையாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி  தெரிவித்துள்ளார்.