கோப்பாய் பகுதியில் நேற்று வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைக்கச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தவராசா செபராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைப்புக்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டருக்கு மின்சாரம் வழங்கப்பட்ட மின் வயர் சேதமடைந்திருந்த நிலையில், அந்த வயரை பிடித்தமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.