வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார் என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மீன் கடந்த மாகாண சபை அமர்வில் தெரிவித்திருந்தார். 

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீனின் கருத்தால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாகாணசபையில் பேச்சு சுதந்திரம் உள்ளமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் அங்கு பேசப்படும் விடயங்கள் தொடர்பாக விமர்சிப்பதற்கோ,  அதை குறித்து விசாரிப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. என தெரிவித்தார்.