அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய நிலைப்போட்டிகள் கடந்த 14, 15 ஆம் திகதி கல்வியமைச்சிலும் 21, 22 ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரியிலும் கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்மொழி அலகின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜி.சடகோபன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது நேற்றைய தினம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்படுவதையும் மங்கள குத்துவிளக்கேற்றுவதையும் உதவிக்கல்விப்பணிப்பாளர் போட்டி விளக்கவுரையை நிகழ்த்துவதையும் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவின் பணிப்பாளர் ஆர்.கருணாசிறி மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சேதுரட்ணம், கல்வி அமைச்சின் தமிழ்மொழிப்பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் சு.முரளிதரன் ஆகியோர் உரையாற்றுவதையும் கல்வி அமைச்சின் ஏனைய உதவிக் கல்விப்பணிப்பாளர் மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நடுவர்கள், போட்டி இணைப்பாளர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.