மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்களை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் 18 வயதுடைய ரவி சார்த்திகா என்பவரையும் ஏறாவூர் பகுதியில் தளவாய், புன்கைகுடா வீதியைச் சேர்ந்த 83 வயதுடைய முத்தையா சிதம்பரம் என்பவரையும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நல்லதம்பி கனகசபை என்பவரையுமே பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர். 

இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.