பெலிஅத்த, நாகுலுகம பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.  கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் பல காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடையந்ததன் காரணமாகவே இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாகுலுகம பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், சம்பவம் தொடர்பில் பெலிஅத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.