கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய வல்லமையுடைய ஏவுகணை பரிசோதனையொன்றை ரஷ்யா மேற்கொண்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த ஏவுகணையானது மூவாயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது என்று அந் நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளன. 

ஐப்பர்சானிக் ரகத்தைச் சேர்ந்த இந்த ஏவுகணையானது நேற்றைய தினம் பின்லாந்து கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் உஸ்தினோவ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டதையடுத்து சில நொடிகளிலேயே இலக்கை குறி தவறாமல் அழித்து தாக்கியுள்ளது.

இதுபோன்றே நிலத்திலிருந்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை கடலுக்குள் இருந்த இலக்கை தாக்கி அழித்தது. நீர், வானம், நிலம் என எந்த இடத்திலிருந்தும் இந்த ஏவுகணையை ஏவ முடியும்.

அடுத்தவாரம் இடம்பெறவுள்ள ரஷ்யாவின் கடற்படை தினத்தின் முன்னோட்டமாகவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.