ஜுவான்டஸ் அணிக்கு ஒப்­பந்தம் செய்­யப்­பட்ட கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்கு அவ்­வ­ணி­யினர் அவ­ரது ராசி­யான  இலக்­க­மான இலக்கம் 7 ஐ அவ­ருக்கு அளித்­துள்­ளனர்.

ரியல் மெட்ரிட் கால்­பந்­தாட்டக் கழ­கத்­துக்­காக விளை­யாடி வந்த போர்த்­துக்கல் கால்­பந்­தாட்ட அணித்­த­லை­வ­ரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தற்­போது ஜுவான்டஸ் அணிக்­கான ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

மென்­செஸ்டர் யுனைட்டெட் கழ­கத்­துக்­காக விளை­யா­டிய காலம் முதல் அவர் 7 ஆம் இலக்க ஜேர்­ஸியை அணிந்தே விளை­யாடி வரு­கிறார். அது முதல் அவர் சீ.ஆர்.7 என்ற பெய­ரி­லேயே அழைக்­கப்­பட்டு வரு­கிறார். அதன்  பின்னர் ரியல் மெட்ரிட் கழ­கத்­துக்­காக விளை­யா­டிய போதிலும் அவ­ருக்­காக 7 ஆம் இலக்­கத்தைத் விட்­டுக்­கொ­டுத்­தனர். அது­போல தற்­போது ஜுவன்டஸ் அணி­யி­னரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 7 ஆம் இலக்கத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.