இன்றைய மாணவர்கள் அதிலும்சாதாரணதரம் மற்றும் உயர்தரம்  படிக்கும் மாணவர்கள் கைத்தொலைப்பேசி இல்லாமல் இருப்பதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளின் தொந்தரவுகளால் அவர்களுக்கு ஸ்மார்ட் கைத்தொலைப்பேசியை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்.

இதனால் அவர்கள் உடலியல் ரீதியாக மட்டுமல்லால் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்த ஆய்வில் கைத்தொலைப்பேசியை பயன்படுத்துவதற்கும் சில விதிமுறைகளை பரிந்துரைத்திருக்கிறார்கள்.

கைத்தொலைப்பேசியை ஒரு நாளைக்கு முப்பது நிமிடத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. அதே போல் கைத்தொலைப்பேசியில் எப்போது பேசினாலும்  இடது பக்க காதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்.

ஏனெனில் வலது காதில் வைத்து பேசும் போது மூளையின் வலது பகுதியிலுள்ள நினைவுத்திறனுக்கான நரம்புகள் பாதிக்கப்படுகிறது அல்லது பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

வலது பக்க மூளை பாதிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். ஏனெனில் அவர்கள் படித்ததை வலது பக்க மூளையிலுள்ள பகுதியில் தான் நினைவில் சேமித்து வைக்கும் திறன் இருக்கிறது.

அதிக நேரம் கைத்தொலைப்பேசியில் பேசும் மாணவர்கள் உளவியல் ரீதியாக அடைவூக்கம் எனப்படும் உளவியல் காரணி தூண்டப்பட்டு, எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாக வேகமாக இயங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

இதனால் அவர்கள் சிக்கலான தருணங்களில் எதிர்மறையான முடிவுகளை எடுத்துவிட்டு தவிப்பதற்கும் கைத்தொலைப்பேசியே காரணம் என்கிறார்கள்.

அதே போல் கைத்தொலைப்பேசியில் சார்ஜ் குறைவாக இருக்கிறது என்பதற்காக அந்த பற்றரியில் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது. அத்தகைய தருணங்களில் வெளியாகும் மின்காந்த அலைகளின் சக்தி இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும் என்பதால் பேசக்கூடாது.

அதையும் கடந்து பேசினால் அவை வெடித்துவிடக்கூடிய அபாயம் உண்டு. அதே போல் கைத்தொலைப்பேசியை எப்போதும் வைபரேட் மூடில் போட்டுவைக்கக்கூடாது என்கிறார்கள். இதன் போது வெளியாகும் அதிர்வலைகள் நேரடியாக தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 

வைத்தியர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.