இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவருக்காக உருவாக்கிய ஒன் லைன் ஒன்றை சொல்லியிருக்கிறார். அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாம்.

மேற்கொண்டு ஆகவேண்டிய பணிகளை செய்யுங்கள் என்று ரவிக்குமாரிடம் ரஜினி கேட்டுக் கொண்டாராம். இதனால் இவ்விருவரும் இணைவது உறுதி என்கிறார்கள் திரையுலகினர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே முத்து, படையப்பா, லிங்கா என மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில் படையப்பா படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் இயக்குநர் சுப்பர் ஸ்டாரிடம் சொல்லியிருக்கிறார் என்று ஒரு தரப்பினரும், இல்லையில்லை இந்த ஒன்லைன் புதிது. படையப்பா படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று மற்றொரு தரப்பினரும் செய்தியை கசியவிட்டிருக்கிறார்கள்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டார் நடிப்பில் "2பொயிண்ட் ஓ" நவம்பர் 29 ஆம் திகதியன்றும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் வெளியாகும் என்பதால் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.