வெயங்கொட - தல்கஸ்மொட பகுதியிலுள்ள ஆற்றில் இன்று மதியம் 1.30 மணியளவில்  நீராட சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

16 மற்றும் 17 வயது மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.