தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும் கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்ட நிலையிலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பெண் தேடியும் செட்ஆகவில்லை.

ஆனால் அதற்குள் அவர் தம்பி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது நண்பர் விஷாலும் நடிகர் சங்க கட்டடம் கட்டிவிட்டு திருமணம் என்று கூறி வருகிறார். அஞ்சலியுடன் கிசுகிசுக்கள் வந்தாலும், ஜெய் திருமணம் பற்றி வாயே திறப்பதில்லை. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கு எல்லாம் சீனியர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். 

இவர்கள் தவிர சிம்பு, அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர்.