மேற்குவங்க மாநிலத்தில் பேஸ்புக் காதலால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய தரம்11இல்  கல்வி கற்கும் மாணவி சாப்பாட்டிற்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  மாணவி பேஸ்புக் மூலம் உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் மெஸேஞ்சர் மூலம் செடிங் செய்து காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் தொலைப்பேசி எண்களை பகிர்ந்து தொலைப்பேசியிலும் பேசி வந்துள்ளனர்.

இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி  மாணவி கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு  வெளியேறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பொதி செய்யும் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இருவருக்கும் வேலை தெரியாததால் அவர்கள்  வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். கையிலும் பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க தள்ளப்பட்டார் மாணவி. மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

வீட்டிலிருந்து மாணவி கொண்டு வந்த பணம் இருக்கும் வரையில் தேவதையாக தெரிந்தவள் பணம் முடிய முடிய வேண்டாதவளாய் தெரிந்துள்ளாள்.

பணத்தையோ நகைகளையோ பெரிதாக மதிக்காத மாணவி பணம் போனால் போகட்டும் அவனது காதல் கிடைத்தால் போதும் என அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்ந்துள்ளாள்.

பணம் பணம் என்று மாணவியை துன்புறுத்தியதோடு வார்ததைகளாலும் செயல்களாலும் அவளை துன்புறத்தியுள்ளான்.

நாட்கள் செல்ல செல்லவே அவன் முதலில் கூறிய ஆசை வார்த்தைகளெல்லாம் காதலல்ல வெரும் நாடகம் என தெரிந்து கொண்டுள்ளால்.

 பல நாட்கள் பசியாலும் இளைஞனின் சித்திரவதையாலும் துடித்த மாணவி ஒரு கட்டத்தில் இளைஞனை விட்டு பிரிந்து பெற்றோரிடம் சென்று விடுவது என தைரியமாக முடிவெடுத்து அயலவரின் உதவியை நாடியுள்ளார்.

ஆயல்வீட்டாரிடமிருந்து தொலைப்பேசியை பெற்று பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது நிலைமையையும் தான் இருக்கும் இடத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் பெற்றோர் பொலிஸாரின் உதவியோடு மகளை மீட்டுள்ளனர்.

சமூக வதை;தளங்களில் ஏற்படும் காதலால் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இன்னுமும் கூட இளைய சமுதாயம் பேஸ்புக் காதலுக்கு அடிமையாவதை நிறுத்திக்கொள்வதாய் இல்லை