“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”

Published By: Daya

21 Jul, 2018 | 03:50 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மிகுந்த அவதானத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ.முஹம்மது அபுபக்கர், இன்னும் இரு தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம்மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தமிழகத்திலுள்ளவர்கள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கையிலுள்ளவர்கள் முன்வைக்கின்றனர். எனினும் அக்குற்றச்சாட்டை நாம் மறுக்கிறோம்.  ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்திருந்த சர்தர்ப்பங்களிலும் நாம் அது குறித்து மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளோம். 

சென்னையிலுள்ள இலங்கைத் தூதர அதிகாரிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியுள்ளளோம். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் நாம் பங்கெடுப்பதாகவும் அவர்களுத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். 

கடந்த காலங்களில் மாத்திரமல்லாது எதிர்காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவதற்கு நாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. உங்களின் பிரச்சினைகளின்போது துணைநிற்போம் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எனினும் இரு நாடுகளினதும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை.

மேலும் இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வேறில்லை. நாம் அனைவரும் ஒரு தரப்பே. ஆகவே இரு நாடுகளுக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அனைத்து பணிகளையும் நாம் தொய்வின்றித் தொடர வேண்டும். அத்துடன் இரு நாட்டு தமிழ் முஸ்லிம்களும் இணைந்து எமது தொடர்புகளை மேலும் புதுப்பிக்க நடவடிக்கை வேண்டும். 

எனது தொகுதியில் “போகநல்லூர்” எனும் பிரதேசத்தில் அகதி முகாம் உள்ளது. அங்கு  இலங்கை அகதிகளும் வாழ்கின்றனர். எனவே நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர்கூட அந்த அகதி முகாமில் நிலவிய மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைத்தேன்.

சிறுபான்மையாக வாழும் தமிழ் முஸ்லிம்களின் வலிமை ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது. சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொள்ளாது சமூதாய முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு பணியாற்ற வேண்டும். அத்துடன் இன்னும் இரு தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம்மக்களைச் சந்தித்துப் பேவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58