வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சம்பெற முயற்சித்த வேளை கைதுசெய்யப்பட்ட இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்டாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கட்டுப்பாட்டாளர் நேற்றைய தினம் இரண்டு இட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முனைந்தபோதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

இந் நிலையில் இன்று கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.