ரஸ்யாவிற்கான தூதுவராக தயான் ஜெயதிலகவை நியமிப்பதை உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு  இடைநிறுத்தியுள்ளது.

தயானின் நியமனத்திற்கு எதிராக பல முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்தே  தெரிவுக்குழு இந்த நியமனத்தை  இடைநிறுத்தியுள்ளது.

தயான் ஜயதிலகவின் நியமனத்திற்கு எதிராக 15 சிவில் அமைப்புகள் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளன என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னர் தூதுவராகயிருந்தவேளை தயான் ஜெயதிலக எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் நாடாளுமன் தெரிவுகுழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அவரின் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது