வவுனியா  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6வயது சிறுமி கடந்த 18ஆம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.