கொழும்பில் நடைபெறும் இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு எதிரான  இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் 9 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

போட்டியின் முதல்நாளான நேற்று எட்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்த கேசவ் மகராஜ் இன்று ரங்கன ஹேரத்தை ஆட்டமிழக்க செய்து தனது ஒன்பதாவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக 9 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது சொந்த மண்ணிற்கு வெளியே அதிக விக்கெட்களை வீழ்த்திய தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை உட்பட பல சாதனைகளை கேசவ் மகராஜ் ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை இறுதி விக்கெட்டிற்காக சிறப்பாக துடுப்பெடுதாடிய ரங்கன ஹேரத் அகில தனஞ்செயவின் உதவியுடன்  இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இருவரும் இறுதி விக்கெட்டிற்காக 74 ஓட்டங்களை பெற்று இலங்கையை பலப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி 20 ஓட்டங்களிற்குள் தனது முதல் மூன்று விக்கெட்களையும் இழந்துள்ளது.