ஏர் - இந்தியா விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணம் செய்த குழந்தையை மூட்டைப்பூச்சி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேவார்க்கிலிருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா 144 விமானம் வந்தடைந்தது. அப்போது, இருக்கையில் இருந்த மூட்டைப்பூச்சி கடித்ததால் 8 மாத குழந்தை அழுதுள்ளது. அழும் குழந்தையை தாய் சோதனையிட்டபோது தடிப்புகளுடன் இரத்தம் கசிந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மூட்டை பூச்சிகள் கடித்ததில் குழந்தைக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.