மதுபாண உற்பத்திக்காக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருத்தொகை எதனோல் தாங்கிகளுடன் மூவரை ஜா-எல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 50 எதனோல் தாங்கிகளைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் குறித்த எதனோலின் மொத்த பெறுமதி சுமார் 13.1 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.