பால்­மாக்கள், துரித நூடில்ஸ் உணவால் சிறு­வர்கள் தன்­னி­னச்­சேர்­க்­கை­யா­ளர்­க­ளாக மாறு­கின்­றனர்

Published By: Robert

29 Feb, 2016 | 09:54 AM
image

சிறு­வர்­க­ளுக்­கான பால்­மாக்­களும் துரித நூடில்ஸ் உண­வு­களும் அவர்­களை தன்­னி­னச்சேர்க்­கை­யாளர்­க­ளாக எதிர்­கா­லத்தில் மாறச் செய்­வ­தாக தெரி­வித்து இந்­தோ­னே­சிய நகர மேயர் ஒருவர் கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

தங்கேராங் பிராந்­திய மேய­ரான ஆரிப் ஆர் விஸ்­மன்­ஸியஹ், ஜகர்த்தா நகரின் மேற்கே அமைந்­துள்ள தனது நகரில் இடம்­பெற்ற கர்ப்­பந்­த­ரித்தல் தொடர்­பான கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் இந்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

இந்­தோ­னே­சிய சிறு­வர்கள் உடல் உறு­தி­யு­டனும் ஆரோக்­கி­யத்­து­டனும் வளர்­வ­தற்கு அவர்­க­ளுக்கு தாய்ப்­பா­லூட்­டுதல் அவ­சியம் என வலி­யு­றுத்­திய அவர், தக­ரத்­தி­ல­டைக்­கப்­பட்ட பால்­மாக்­களும் துரித உணவுகளும் அவர்களை எதிர்காலத்தில் தன்னினச்சேர்க்கையாளர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right