சட்டவிரோதமான முறையில்  ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இந்தியரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் 50  வயதான இந்தியாவை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து  சுமார்  96 இலட்சம்  ரூபா பெறுமதியான ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.