ஜேர்மனியில் பேருந்தொன்றில் பத்துபேரை கத்தியால் குத்திகாயப்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் வடபகுதி நகரான லுயிபெக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நகரை சேர்ந்த 34 வயதான ஜேர்மனிய பிரஜையே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அந்த நபர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்தார் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பேருந்தில் காணப்பட்ட முதுகுப்பையிலிருந்து புகைவந்ததாகவும் எனினும் அதற்குள் ஆபத்தான பொருட்கள் எவையும் இருக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் ஈரானில் பிறந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவரும் கொல்லப்படடவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட நபர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து விபரங்களை வெளியிட்டுள்ள பயணிகள் பயணியொருவர் முதிய பெண்மணியொருவருக்கு தனது ஆசனத்தை வழங்கிய சில நிமிடங்களில் இந்த நபர் அவரை கத்தியால் குத்தினார் என குறிப்பிட்டுள்ளனர்.